×

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரிட்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் பக்கிங்ஹாம் அரண்மனையில் காலமானார். 96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராணியில் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் கென்சிங்டன் அரண்மனையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், இன்று காலை ராணியின் உடல்நிலையை சோதித்ததைத் தொடர்ந்து, ராணியின் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து அச்சம் அடைந்தனர். மேலும் ராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் பல்மோரளில் இருக்கும் கென்சிங்டன் அரண்மனையில் தங்கியிருந்தார். ராணியின் உடல் நிலை மோசமாகி வருவதால், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ராணியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரது நான்கு பிள்ளைகளும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திருந்தனர். இந்நிலையில் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் காலமானார். பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானதை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராணி எலிசபெத்தின் அரவணைப்பையும், கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடனான சந்திப்பை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 1997-ல் கமல்ஹாசனுடன் மருதநாயகம் படத் தொடக்க விழாவில் முன்னாள் முதல்வர் கலைஞருடன் எலிசபெத் ராணி பங்கேற்றார். 25 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு வந்த எலிசபெத் ராணி மருதநாயகம் படத் தொடக்க விழாவில் 20 நிமிடங்கள் பங்கேற்றார்.



Tags : Britain ,Queen Elizabeth II , Britain's Queen Elizabeth II dies of ill health at Buckingham Palace
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...