×

கோலி, ராகுல் அதிரடி.. ஆப்கன் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

துபாய்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி;  20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடர்நது 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் அணி அகளமிறங்க உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி - 122, கே.எல்.ராகுல் 62 ரன்களை விளாசினர். 2 ஆண்டு, 9 மாதம், 16 நாட்களுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் கோலி சதத்தை பதிவு செய்துள்ளார். கடைசியாக 2019 நவம்பர் 23ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார்.

Tags : Kohli ,Raqul Action , Kohli, Rahul in action.. 213 runs target for Afghan team
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...