×

30% மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட் அளித்த வழிகாட்டுதல் சமூகநீதிக்கு எதிராக உள்ளது: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: 30 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட் அளித்த வழிகாட்டுதல் சமூகநீதிக்கு எதிராக உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ஐகோர்ட் வழிகாட்டுதலை செயல்படுத்தினால் மகளிருக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டுவந்ததன் நோக்கமே சிதைக்கப்படும். வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம், அதிகாரம் கிடைக்காத பிரிவினருக்கு அதை தருவதற்கான கருவிதான் இடஒதுக்கீடு.

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : iCort ,Ramadas ,Bamaka , 30% reservation for women, ICORD guidelines, social justice, Ramadoss
× RELATED ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்