×

ஆசிய கோப்பை டி20: இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

துபாய்:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை இழந்தது. இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவு தாக்குப்பிடித்த போதிலும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படாமல் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, துபாயில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்துவிட்டதால் ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

சம்பிரதாய போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமதுநபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித்கான், முஜீப்ரகுமான், பரூக்கி ஆகிய தலைச்சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் கடும் சவால் அளிப்பார்கள். இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 3 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

Tags : Asia Cup T20 ,India ,Afghanistan , Asia Cup T20: India-Afghanistan clash today
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!