×

சுதந்திர தின நூற்றாண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ரூ.2,400 லட்சம் கோடியாக உயரும்: அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு

சான் பிரான்சிஸ்கோ: ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி 675 பில்லியன் டாலரை எட்டியது. 2030ம் ஆண்டுக்குள், இதை 2 டிரில்லியன் டாலராக (ரூ.160 லட்சம் கோடி) உயர்த்த விரும்புகிறோம். உலகிலேயே 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் இந்திய பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக (ரூ.2,400 லட்சம் கோடி) உயரும் என எதிர்பார்க்கிறோம். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சில அதிரடி திட்டங்கள் நன்றாக செயல்பட்டால், பொருளாதாரம் 45 டிரில்லியன் டாலர் வரை (ரூ.3 ஆயிரத்து 600 லட்சம் கோடி) உயரக்கூடும். கடந்த சில ஆண்டுகளில் ஒன்றிய அரசு போட்ட அடித்தளத்தால் பொருளாதாரம் வேகமாக உயரும்.

Tags : Independence Day Centenary ,Minister ,Piyush , Indian Economy to Grow to Rs 2,400 Lakh Crore by Independence Day Centenary: Minister Piyush Goyal Speech
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...