குகன்பாறை-செவல்பட்டி சாலை பாலத்தை அகலப்படுத்த வேண்டும்: வாகனஓட்டிகள் கோரிக்கை

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே குகன்பாறையில் இருந்து செவல்பட்டி செல்லும் சாலையில் அலமேலுமங்கைபுரம் அருகே உள்ள பாலம் குறுகளாக உள்ளதால் வாகனங்கள் சிரமமாக இருப்பதால் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை அருகே குகன் பாறை கிராமம் உள்ளது. இங்கிருந்து கோவில்பட்டி, சங்கரன் கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் தினமும் வணிக போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றன. குகன்பாறை கிராமத்தில் இருந்து செவல்பட்டி வரையிலான சாலை 7 மீட்டர் வரை அகலமுடையது.

இந்த சாலையில் உள்ள அலமேலுமங்கைபுரம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்றினை அதிகாரிகள் அமைத்துள்ளனர். ஆனால் அதிகாரிகளால் அமைக்கப்பட்ட இந்த பாலமானது சாலையை விட குறுகலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 5 மீட்டர் வரை மட்டுமே நீளமுள்ளது. இதனால் வாகனங்கள் இந்த சாலையில் வேகமாக செல்லும் போது எதிரே வாகனங்கள் வந்தால் பாலத்தில் மோதி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் பாலத்தின் பக்கவாட்டில் ஒரு புறம் சிமெண்ட் தடுப்பு சுவரும், மறுபுறம் இரும்பு தடுப்பும் அமைத்துள்ளனர்.

இதில் இரும்பு தடுப்பில் எந்தவித எச்சரிக்கை ஸ்டிக்கரும் இல்லை. இரவில் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்லும் போது தடுப்பு கம்பி இருப்பதே தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் இங்கு அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இதே போன்று பாலத்தின் மறுபுறம் அமைக்க பட்டுள்ள சிம்ண்ட் தடுப்பை மறைத்து முட்செடிகள் அடர்ந்து முளைத்துள்ளன. இதனால் பகல் நேரத்தில் கூட இந்த தடுப்பு தெரிவிதில்லை. இந்த சாலையில் வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமே இங்கு எச்சரிக்கையுடன் சாலையை கடந்து செல்கின்றனர். வெளியூர் வாகன ஓட்டிகள் கவனகுறைவாக வரும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த சாலை சங்கரன் கோவில் செல்லும் வழியில் உள்ளது.

மதுரை, விருதுநகர், சிவகாசி பகுதியிலிருந்து சங்கரன் கோவில் செல்லும் பக்தர்கள் இந்த வழியில் தான் செல்கின்றனர். ஆனால் சாலையை விட பாலம் குறுகலாகவும், பாலத்தின் தடுப்புசுவரில் எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லாததாலும் வெளியூர் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே குகன்பாறை-செவல்பட்டி சாலையில் உள்ள பாலத்தை இடித்து அகலபடுத்த வாகன ஓட்டிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அலமேலுமங்கைபுரம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்றினை அதிகாரிகள் அமைத்துள்ளனர். இந்த பாலம் சாலையைவிட அகலம் குறைவாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமமாக உள்ளது.

மேலும் பாலத்தில் தடுப்பு சுவர்கள் அமைத்து பல வருடங்களாகி இருப்பதால் புட்முதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இந்த பகுதியில் தடுப்புசுவர் ஒன்று இருப்பதே தெரிவது இல்லை. மேலும் மதுரை, விருதுநகர், சிவகாசி பகுதியிலிருந்து சங்கரன் கோவில் செல்லும் பக்தர்கள் செல்லும் போது சிரமப்படுகின்றனர்.ஆனால் சாலையை விட பாலம் குறுகலாகவும், பாலத்தின் தடுப்புசுவரில் எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லாததாலும் வெளியூர் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் அதிகாரிகள் பாலத்தின் அளவை அகலபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: