நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை ஓணம் மேலும் வலுப்படுத்தட்டும்: பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து

டெல்லி: கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என மொத்தம் 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் ஓணம் கொண்டாடப்படுகிறது.

ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக அம்மாநில மக்கள் நம்புகின்றனர். இதனால் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் கோலமிட்டு வரவேற்பார்கள். கேரளாவில் மட்டுமின்றி கேரள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி இந்திய நாட்டின் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில்,

பிரதமர் நரேந்திரமோடி: அனைவருக்கும், குறிப்பாக கேரளா மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மலையாளி சமூகத்தினர் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த திருவிழா இயற்கை அன்னையின் முக்கிய பங்கையும், கடின உழைப்பாளியான விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஓணம் நம் சமூகத்தில் நல்லிணக்க உணர்வை மேலும் அதிகரிக்கட்டும் என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு:  சக குடிமக்களுக்கு, குறிப்பாக மலையாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள். புதிய அறுவடையைக் குறிக்கும் ஒரு பண்டிகை, ஓணம் சமத்துவம் மற்றும் உண்மையின் மதிப்புகளைக் கொண்டாடுகிறது. இந்த பண்டிகை சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தி, அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும் என வாழ்த்தியுள்ளார்.

Related Stories: