பெரியகுளம்-அடுக்கம் மலைச்சாலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

பெரியகுளம்: கனமழையால் சேதமடைந்த பெரியகுளம்- அடுக்கம் வழியாக கொடைக்கானல் ெசல்லும் மலைச்சாலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்வதற்கு புதிய சாலை அமைக்கும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதிய சாலைப் பணிகள் 95 சதவீதம் முடிவற்ற நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக, பெரியகுளம்- அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சாலையை தற்காலிக சீரமைக்கும் பணியினை நெடுஞ்சாலை துறையினர் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொண்டு வருகின்றனர். சாலையை சீரமைக்கும் பணியில் ஒரு லட்சத்திற்கும் மேலான மண் மூட்டைகளைக் கொண்டு அடுக்கி 95 சதவீதம் தற்காலிக பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 4 தினங்களுக்குள் தற்காலிக பணிகள் அனைத்தும் முடிந்து, இந்த சாலையில் போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு, சிறிய ரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: