×

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி: கொட்டும் மழையில் மக்கள் கூட்டம்

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா முக்கிய நிகழ்ச்சியான புனித ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி கொட்டும் மழையில் கோலாகலமாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் ஆண்டு திருவிழா கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக எளிய முறையில் நடைபெற்றது. இந்தாண்டின் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மாதா பெரிய தேர் பவனி நேற்று நடைபெற்றது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேர் புனிதம் செய்தார். இதையடுத்து, இரவு 8 மணிக்கு பேராலயத்தில் மணிகள் ஒழிக்க மின்விளக்கு மலர் அலங்காரத்துடன் தாயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலயம் முகப்பில் இருந்து புறப்பட்டு சென்றது. அலங்கார தேர்கள் வளம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளா கட்சியாக அமைந்தது. தேர் பவனி நிகழ்வில் கொட்டு மழையினையும் பொறுப்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மனம் உருகி மாதாவை வழிபட்டனர்.

இதேபோன்று சென்னையில் பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் பொன்விழா ஆண்டு தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியை தேர் பவனி நடைபெற்றது. மலர் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்ரானது பெசன்ட் நகர் முக்கிய சாலைகளில் பவனி வந்தது. பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் தேர் பவனி விழாவில் ஆயிரக்ணக்கான மக்கள் திரண்டு தேர் பவானியை கண்டனர்.        


Tags : Velankanni St. Arogya Mata Periya Ther Bhavani , Velankanni, Arogya, Mata, Chariot, Rain, People, Crowd
× RELATED சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது...