இளையராஜா இசையில் பாடிய தனுஷ்

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் இடையே நல்ல நட்பு உள்ளது. இருவரும் சேர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களில் பணியாற்றினார்கள். இதில் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது.

இப்போது வெற்றிமாறன் இயக்கி வரும் படம் விடுதலை. இதில் விஜய் சேதுபதி, சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இந்த படத்தை இரண்டு பாகமாக எடுப்பதாக வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். இளையராஜா இசையில் தனுஷ் பாடிய அந்த பாடல், சமீபத்தில் இளையராஜாவின் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது.

Related Stories: