×

உக்ரைனில் குறிக்கோளை அடையும் வரை தாக்குதல் தொடரும்: அதிபர் புடின் உறுதி

மாஸ்கோ: உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், பொருளாதார தடைகளினால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை முடக்க நினைத்தால், உக்ரைன் மீதான அதன் ராணுவ நடவடிக்கைகளின் பிடி இறுகும் என்று அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.இது குறித்து விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய புடின், ‘ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை தொடங்கவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரவே ரஷ்யா விரும்புகிறது. உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை பாதுகாக்கவே உக்ரைனுக்கு ரஷ்ய படையினர் அனுப்பப்பட்டனர். டான்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காகவே ரஷ்யா போரிடுகிறது. தனது பொருளாதார தடைகளுக்கு ரஷ்யா பணியாது. எங்களின் குறிக்கோளை எட்டும் வரையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவோம்,’ என்று எச்சரித்தார்.

Tags : Ukraine ,President ,Putin , Attack in Ukraine will continue until objective is achieved: President Putin vows
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...