×

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை ராகுல்காந்தி முயற்சி வெற்றி பெறும்: ஜவாஹிருல்லா வாழ்த்து

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள ராகுல்காந்தி முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி பெறும் என்று ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.   மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பது மிகப் பொருத்தமானது. வெறுப்பும், வேற்றுப்படுத்தலும், வன்மமும், வன்முறையும் தலைவிரித்தாடச் செய்து, நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயக அமைப்பு முறையை, சமூகநீதியை தகர்க்கும் வேலைகளை ஒன்றிய பாஜவும் அதன் குடும்ப அமைப்புகளும் தடையின்றி செய்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைகளுக்கு கையளிக்கும் வகையில் ராகுல்காந்தி ஒரு பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.   தற்போதைய அரசியல் சூழலில் இந்த அறிய முயற்சி இன்றியமையாத அவசியமான ஒன்று. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் இந்த யாத்திரை பயன்படும் என்று திடமாக நம்புகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Rahul Gandhi ,Padayatra ,Kanyakumari ,Kashmir ,Jawahirullah , Rahul Gandhi's bid for Padayatra from Kanyakumari to Kashmir will be successful: Jawaharlal Wishes
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...