இந்து சமய அறநிலையத்துறையில் 12 செயல் அலுவலர்களுக்கு விருப்ப மாறுதல்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: இந்து  சமய  அறநிலையத்துறையில் 12 செயல் அலுவலர்களுக்கு விருப்ப மாறுதல் அளித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்களுக்கு விருப்ப மாறுதல் குறித்த விண்ணப்பங்களை பரிசீலித்து விருப்ப மாறுதல் மற்றும் பொதுநல, நிர்வாக நலன் கருதி 12 பேரை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு வருமாறு: வள்ளியூர் சுப்பிரமணியசாமி கோயில் செயல்அலுவலர் திருநெல்வேலி மாவட்டம் பாளையஞ்சாலை குமாரசாமி கோயிலுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் பகவதியம்மன் கோயில் செயல்அலுவலர் விநாயகவேல் ராயப்பேட்டையில் உள்ள ரத்தின விநாயகர் கோயிலுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலின் செயல் அலுவலர் பாக்கியராஜ் கடலூர் மாவட்டம் பிரளயகாலேஸ்வரர் கோயிலுக்குமாக 12 பேருக்கு விருப்ப மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அனைவரும் தற்போது பணியில் உள்ள கோயில்களின் அனைத்து பொறுப்புகளையும் கூடுதல் பொறுப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு மாறுதல் செய்யப்பட்ட கோயிலில் உடனே பணியில் சேரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: