உக்ரைன் போரால் பாதிப்பு புடினுக்கு மோடி கண்டிப்பு: மாநாட்டில் பரபரப்பு

புதுடெல்லி: ரஷ்யாவில் உள்ள விளாவாஸ்டாக் நகரில் நேற்று நடந்த கிழக்கு பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடினும் கலந்து கொண்டு பேசுகையில், ‘ரஷ்யாவில் முதலீட்டை அதிகரிக்க கடந்த 2015ம் ஆண்டு இந்த அமைப்பு துவங்கப்பட்டது.  இது, ரஷ்ய துார கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பின் முதன்மை தளமாக மாறி உள்ளது.  இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில், பூமியின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ரஷ்யாவில் எரிசக்தி துறையில் மட்டுமின்றி, மருந்து மற்றும் வைரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை இந்தியா செய்துள்ளது. எரிசக்தி துறையில் ரஷ்யா உடனான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இந்தியா விரும்புகிறது,’ என தெரிவித்தார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனால், ஐநா.வில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரித்து, இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கி நிற்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான போரின் பாதிப்பு குறித்து, புடின் முன்னிலையில் பிரதமர் மோடி முதல்முறையாக விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: