அதிமுக பொதுக்குழு விவகாரம் ஓபிஎஸ் ஆதரவாளர் மேல்முறையீடு மனு

சென்னை: அதிமுக விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைரமுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ‘பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. தனி நீதிபதியின் தீா்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சாப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இதே விவகாரத்தில் அவரது ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான அம்மன் பி வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை கோரப்பட்டுள்ளது. இதே வழக்கில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: