×

வாழப்பாடி அருகே 3 ஆயிரம் தீப்பந்தங்களுடன் ஸ்ரீஅத்தனூர் அம்மன் சக்தி அழைத்தல்: எருமை கிடா பலியிட்டு வழிபாடு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கபுரத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அத்தனூர் அம்மன், ஸ்ரீமகாமாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பின் தேர்திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. தேரோட்டத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக ரூ.1.25 கோடியில் 2 தேர்கள் செய்யும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. நேற்றிரவு ஸ்ரீஅத்தனூர் அம்மன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பந்தங்கள் புடைசூழ ஆளுயரை மரக்குதிரையில் அம்மனை அலங்கரித்து வைத்து குதிரை பல்லக்கை 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூக்கிச்செல்ல வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் எருமை கிடா பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. திருவிழாவில் இன்று மாலை அத்தனூர் அம்மன் தேரோட்டமும், நாளை மகா மாரியம்மன் தேரோட்டமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Sriathanur Amman Shakti , Invocation of Sri Athanur Amman Shakti with 3000 torches near Vazhappadi: Buffalo and Kida sacrifice and worship
× RELATED மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு...