உத்தவ் தாக்கரேவுடன் மோதல் விவகாரம்; எத்தனை சூர்ப்பனகைகள் வந்தாலும் மூக்கை அறுப்போம்: நடிகையான எம்பிக்கு சிவசேனா எச்சரிக்கை

மும்பை: எத்தனை சூர்ப்பனகைகள் வந்தாலும் அவர்களின் மூக்கை அறுப்போம் என்று, நடிகையும், சுயேட்சை எம்பியுமான நவநீத் ராணாவை சிவசேனா செய்தி தொடர்பாளர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது, அவரை கடுமையாக விமர்சித்த நடிகையும், சுயேட்சை எம்பியுமான நவநீத் ராணா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் நவநீத் ராணா இருக்கும் நிலையில், மாநிலத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அவர் சிவசேனா கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதுகுறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சனா காடி கூறுகையில், ‘காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் நாங்கள் (சிவசேனா) கூட்டணி வைத்துள்ளதாக கூறுகின்றீர்கள். பால்தாக்கரே மற்ற சமூக மக்களை சமமாக நடத்தினார். அந்த நேரத்தில் ‘சி’ கிரேடு படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக இருந்தீங்க... ஹனுமான் சாலிசாவுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அதற்காக ஹனுமன் சாலிசாவுக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? காகத்தின் சாபத்தால் மாடு சாகாது. சிவசேனா நேற்று வலுவாக இருந்தது. இன்றும் வலுவாக உள்ளது.

உங்களைப் போன்ற 100 எதிரிகள் ஒன்றாக நின்றாலும், நாங்கள் மீண்டும் காவிக்கொடியை இந்த மகாராஷ்டிராவில் ஏற்றுவோம். எத்தனை சூர்ப்பனகைகள் வந்தாலும் அவர்களின் மூக்கை அறுப்போம்’ என்று காட்டமாக தெரிவித்தார்.

Related Stories: