வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழா: பெசன்ட்நகர் பகுதியில் இன்று மாலை போக்குவரத்து மாற்றம்

சென்னை: பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய தேர் திருவிழாவையொட்டிபெசன்ட்நகர் பகுதியில் இன்று மாலை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்திர திருவிழாவினை முந்நிட்டு 07.09.2022 அன்று நடைபெறவிருக்கும் தேர் பவனியை கருத்தில் கொண்டு, பெசன்ட் நகருக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 07.09.2022 அன்று மாலை 17-00 மணி முதல் 21-00 மணி வரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.

* திரு.வி.க. பாலம், எஸ்.வி.படேல் சாலையில் இருந்து பெசன்ட்   அவின்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்ல விரும்பும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடைசெய்யப்பட்டு, எல்.பி. சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டு அவர்கள் இலக்கை அடையலாம்.

* 7வது அவென்யூ மற்றும் எம்.ஜி.ரோடு சந்திப்பில் இருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

* M.L பூங்காவிலிருந்து MTC பேருந்துகள், பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. மேற்கண்ட வாகனங்கள் ஆவின்  பூங்கா, எல்.பி சாலை வழியாக, எம்.ஜி. சாலை, பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

* பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கிச் செல்லும் MTC பேருந்துகள் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ மற்றும் L.B. சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

Related Stories: