டெல்லியில் இந்திய கம்யூ. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைவர் உடன் நிதிஷ் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யாவுடன் நிதிஷ்குமார் சந்திப்பு நடத்தினார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் உள்பட 7 கட்சிகள் ஓரணியாக சேர்ந்துள்ளதாகவும், பாஜக தனியாக உள்ளதாகவும் அவர் பேட்டியளித்தார். நாங்கள் இணைந்து செயல்படுவதால் ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன் என்றும், பாஜக கூட்டணியில் இருந்து தான் விலகியதை நல்ல செயல் என்று மக்கள் வரவேற்றதாகவும் அவர் கூறினார்.  

Related Stories: