×

முள்ளிப்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் முள்ளிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ெஜயந்தி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மாணிக்கம் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் தேன்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களின் நற்பணிகளை பாராட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் கலாம் கல்வி மையம் சார்பில் வழங்கப்பட்ட நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினர்.

பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கலாம் கல்வி மைய அறக்கட்டளை நிர்வாகிகள் பிரகாஷ், விநாயகம், விஜயகாந்த், பிரவீன், ஸ்ரீதர், அசோக், விக்னேஷ், அம்பிகா, பியூலா, பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Teacher's Day ,Mullipakkam Government School , Teacher's Day Celebration at Mullipakkam Government School
× RELATED சென்னை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான...