ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.7 லட்சம் மதிப்புள்ள காப்பர் திருடிய 4 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் அருகே தொழிற்சாலையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள காப்பர் பொருட்களை திருடிய தொழிற்சாலை செக்யூரிட்டி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைபாக்கம் சிப்காட் பகுதியில் அலுமினியம் உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான காப்பர் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (33). மணிகண்டன் (32) ஆகிய இருவரும் சேர்ந்து அதே தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிற்சாலை காவலாளிகளான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த  சுப்ரத் (28), உத்தரபிரதேசத்தை சேர்ந்த விபின்குமார் (28) ஆகிய இருவருடன் சேர்ந்து தொழிற்சாலையில் இருந்து சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான காப்பர் பொருட்களை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: