சோழவரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் திறப்பு; எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு

புழல்: சோழவரம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.10 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது.

இதற்கு, சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவரும், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான கருணாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சுகவேனி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன், ஊராட்சித் துணைத் தலைவர் அபிஷா பிரியதர்ஷினி ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் பங்கேற்று புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Related Stories: