×

பனப்பாக்கம் கிராமத்தில் அரசு பள்ளிக்கு மேஜை, நாற்காலி

பெரியபாளையம்: பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு மேஜை, நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி கழகம் சார்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் மேஜை மற்றும் நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன்  தலைமை வகித்தார்.  பள்ளியின் (பொறுப்பு) தலைமை ஆசிரியர் தேவிகா ராணி அனைவரையும்  வரவேற்றார். தாமோதரன், ஜெகநாதன், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

சென்னை கீழ்பாக்கம் ரோட்டரி கழகம் தலைவர் பத்மஸ்ரீ சாய், செயலாளர் தன்யா அஜய், இயக்குனர், முகுந்த் பையா, சங்க நிர்வாகி சாய் வெங்கட் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மேஜை மற்றும் நாற்காலிகளை வழங்கி மாணவர்கள் சிறந்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஊக்குவித்து சிறப்புரையாற்றினர்.
இதேபோல் பெரியபாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் இசிஜி உள்ளிட்ட மருத்துவ உபகரண கருவிகளை மருத்துவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த விழாவின் முடிவில் ஆசிரியர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

Tags : Banapakkam , Table, Chair for Govt School in Banapakkam village
× RELATED திருமண வரம் அருளும் மயூரநாதர்