மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி ஆலோசனை கூட்டம்  நடந்தது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் அடங்கிய 20 ஊராட்சிகளுக்கு ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி வல்லூரில் உள்ள கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பா.தமிழரசன். யுவராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வே.ஆனந்தகுமார். முன்னாள் மாவட்ட பிரதிநிதி பா.து.தமிழரசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் ராஜா, சிறுவாக்கம் சங்கர், ரவிச்சந்திரன், செல்வமணி, தாஸ்,  வன்னிப்பாக்கம் முரளி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள், இளைஞரணி அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராம் முகேஷ் நன்றி கூறினார்.

Related Stories: