126 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்; ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளியூரில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் பயனாளிகள் என 126 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல  இயக்குனர் எம்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுதலைவர் ஜெயசீலி ஜெயபாலன், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.பர்க்கத்துல்லாகான், மாவட்ட கவுன்சிலர்கள் டி.தென்னவன், இந்திரா பொன்குணசேகர், கால்நடை மருத்துவர்கள் வெங்கட்ரமணன், பொற்கொடி, கார்த்திகேய பிரபு, லோகநாதன், அருண், கீதா, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய கவுன்சிலர் டிஎம்எஸ்.வேலு, தசரத நாயுடு, ஊராட்சி துணைத் தலைவர் டி.முரளி கிருஷ்ணன், டிஎம்எஸ்.வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 126 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் பப்பி முனுசாமி, திமுக நிர்வாகிகள் மனோகரன், கே.விமலா குமார், வி.கன்னியப்பன், டி.மூர்த்தி, பி.நாகராஜ், கெஜா, வி.எம்.முருகேசன், இ.பி.ரவி, அஜித்குமார், குணா, எம்.நாகராஜ், எஸ்.நரசிம்மன், பி.பிரபு, முருகைய்யன், யுவராணி, குட்டி,  அர்ஜூனன், ஆனந்தன், சிற்றரசு, சுரேஷ் ,சர்தார் பாய், டில்லி, ஏழுமலை, ஜேசிபி ரஜினி, கிரிஜா, ஜெயம்மாள், எஸ்.தேவி, தரணி, மகா, நசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: