×

தென் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம்: இன்று கன்னியாகுமரி செல்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில் செல்கிறார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரையை மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலிக்கு சென்று இரவு தங்குகிறார்.

நாளை (8ம் தேதி) காலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். மதுரை செல்லும் வழியில் விருதுநகரில் மதிய உணவு சாப்பிடுகிறார். திமுக முப்பெரும் விழா வருகிற 15ம் தேதி விருதுநகரில் நடக்கிறது. இந்த விழா நடைபெறும் இடத்துக்கு நேரடியாக சென்று, விழா ஏற்பாடுகள் குறித்து திமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மதுரை வந்தடைகிறார்.

9ம்தேதி (நாளை மறுதினம்) காலை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். தொடர்ந்து வேலம்மாள் குழும இல்ல திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். பின்னர், மு.க.ஸ்டாலின் மதுரையில் அருங்காட்சியக பணிகளையும் தொடங்கி வைத்து, அங்கு கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தையும் பார்வையிடுகிறார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் 9ம் தேதி இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.


Tags : Chief Minister ,M.K.Stal ,Kanyakumari , Chief Minister M. K. Stalin's 3-day tour of southern districts: He will leave for Kanyakumari today
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...