வைகை அணை இன்று திறப்பு

சென்னை: தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் விநாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும் இன்று (7ம் தேதி) முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை  மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Stories: