பஞ்சாபில் மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்

பாக்வாரா: பஞ்சாபில் மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பல்விர் ராணி சோதி. ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நீதா டிசோசாவுக்கு அனுப்பி உள்ள தனது ராஜினாமா கடிதத்தில்,, ‘எனது குடும்ப சூழல்நிலை காரணமாக என்னால் இந்த பதவியில் தொடர்ந்து பணியாற்ற முடியாததால் தயவு செய்து என்னை விடுவித்துவிடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். பதவியில் இருந்து ராஜினாமா செய்தாலும் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கும் நிலையில் பல்விர் ராணி சோதி ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: