மதரஸாவில் படித்து வந்த மாணவனின் உடல் மீட்பு: அரியானா போலீஸ் விசாரணை

சண்டிகர்: அரியானா மதரஸாவில் படித்து வந்த மாணவனின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் நுஹ் அடுத்த சோகா என்ற கிராமத்தில் அமைந்துள்ள மதரஸாவில் படிக்கும் 11 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸ் ஏஎஸ்பி உஷா குண்டு கூறுகையில், ‘மத்ரஸா வளாகத்தில் உள்ள அறையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மண்டிகெடா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் மதரஸாவில் சுமார் ஒரு வருடமாக படித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சிறுவன் வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்த நிலையில், தற்போது சிறுவனின் சடலம் மதரஸா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: