×

லாலுவுக்கு தண்டனை கொடுத்த 59 வயது நீதிபதிக்கும் வக்கீலுக்கும் மறுமணம்: ஜார்கண்ட், பீகாரில் சுவாரஸ்யம்

ராய்ப்பூர்: லாலுவுக்கு சிறை தண்டனை கொடுத்த நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் மறுமணம் செய்து கொண்ட சம்பவம் ஜார்கண்ட் மற்றும் பீகாரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஷிவ்பால் சிங் (59), மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிக்கிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை கொடுத்தவர். இவரது மனைவி கடந்த 2006ம் ஆண்டு இறந்தார். இந்நிலையில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் நுதன் திவாரி (50) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நீதிபதி ஷிவ்பால் சிங்குக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதேபோல் வழக்கறிஞர் நுதன் திவாரியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அதனால் இருவரும் அவரவர் துணைகளை பிரிந்து வாழ்வதால், குடும்பத்தினரின் ஆதரவுடன் மறுமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ஜார்கண்ட் மற்றும் பீகாரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : Lalu ,Jharkhand, Bihar , 59-year-old judge and lawyer who sentenced Lalu remarry: Jharkhand, Bihar interesting
× RELATED லாலு கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு 1...