அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து சி.வி.சண்முகம் கூடுதல் மனு

சென்னை: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்கவில்லை. குற்றச்செயல்கள் நடந்த இடத்திற்கு வந்து சிபிசிஐடி பார்வையிடாதது அதிர்ச்சி அளிக்கிறது. அதிமுக அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதான எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். சி.வி.சண்முகத்தின் கூடுதல் மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: