நன்னடத்தை பிணையை மீறிய திருவல்லிக்கேணி ரவுடிகள் 2 பேருக்கு 275 நாட்கள் சிறை: மயிலாப்பூர் துணை கமிஷனர் உத்தரவு

சென்னை: சென்னையில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்கில் ெதாடர்புடைய ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையை சேர்ந்த விஜய்(எ)மொட்டை விஜய்(21) மற்றம் திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த விஸ்வா(எ) விஸ்வநாதன்(23) ஆகியோர் மீது ஒரு கொலை, ஒரு கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் உள்ளது.

இதற்கிடையே இருவரும் கடந்த 19.5.2022ம் தேதி மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி ஒரு வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று நன்னடத்தை உறுதி பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர். ஆனால், அதை மீறிய ரவுடிகளான விஜய் மற்றும் விஸ்வா ஆகியோர் கடந்த மாதம் 20ம் தேதி ஐஸ்அவுஸ் பகுதியில் ஹரி(எ)சின்ன ஹரி என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்ய முன்றனர். இதுகுறித்து ஹரி அளித்த புகாரின் படி ஐஸ்அவுஸ் போலீசார் விஜய் மற்றும் விஸ்வா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த கைது செய்தனர்.

இந்நிலையில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி விஜய் மற்றும் விஸ்வாவை செய்முறை நடுவராகிய மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் ஒரு வருட காலத்தின் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்களை கழித்து மீதமுள்ள 275 நாட்கள் பிணையில் வெளியே வரமுடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதைதொடர்ந்து ஐஸ்அவுஸ் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: