×

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை திறக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கள்ளக்குறிச்சி : கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை திறக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஜூலை 13ம் தேதி 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கனியாமூர் பள்ளியில் கடந்த ஜூலை மாத, 17ம் தேதி மிகப்பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தில் பள்ளியின் கட்டிடங்கள், வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை முற்றிலும் சேதம் அடைந்தது. பள்ளியில் வகுப்புகள் நடக்கமுடியாத சூழலில் ஆன்லைன் முறையிலும், சில வகுப்புகளுக்கு வேறு பள்ளிகளிலும் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கலவரத்தில் தற்போது வரை கலவரம் செய்தவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி சேதமடைந்து 2 மாத காலமாகியும், அந்த பள்ளியில் பயிலும் 3000 மாணவர்களின் எதிர் காலம் பாதிக்கப்படுவதாகவும், ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு போதிய வகையில் கல்வி கற்க முடியவில்லை என கூறி அந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் அங்கு உள்ள அலுவலக ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் சம்பவத்தை அறிந்து பிற்பகல் மாணவர்களின் பெற்றோர்களை சாதிப்பதாகவும், அதன் பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.    


Tags : Kallakkurichi ,Kaniyamur Shakti Metric School , Kaniamoor, power, matric, school, open, collector, office, siege
× RELATED விழுப்புரம், கள்ளக்குறிச்சி...