போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையை ஏற்க போவதில்லை: இலங்கை வெளியுறவு அமைச்சர் திட்டவட்டம்..!!

கொழும்பு: இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான சர்வதேச தீர்மானத்தை ஏற்க போவதில்லை என்று இலங்கை அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. எதிர்வரும் 12ம் தேதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது.

இந்நிலையில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஐ.நா. பேரவையில் இலங்கை மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் தீர்வுகளுக்கும், இலங்கை அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தை விரைவில் திருத்துவதோடு தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகளை சமநிலைப்படுத்தும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று சப்ரி குறிப்பிட்டார்.

வரும் 12ம் தேதி ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கை உள்நாட்டின்போது ஏற்பட்ட போர் குற்ற விசாரணை தொடர்பாக பிரிட்டன் நேசநாடுகள் புதிய தீர்மானத்தை முன்வைக்க தயாராகி வருகின்றன. இந்த தீர்மானத்திற்கு எதிராக மற்ற நாடுகளிடம் ஆதரவு திரட்டும் விதமாக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இலங்கை அரசு பிரதிநிதிகள் குழு ஜெனிவா செல்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: