×

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் சுரேஷ் ரெய்னா..!!

மும்பை: கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்களில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.டோனி ஓய்வை அறிவித்த உடன், அவருடன் தாமும் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அந்த ஆண்டே சுரேஷ் ரெய்னா அறிவித்திருந்தார். இருப்பினும் அதன் தொடர்ச்சியாக இந்திய அளவில் டொமஸ்டிக் தொடர்களிலும், ஐபிஎஸ் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக விளையாடி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது சுரேஷ் ரெய்னா எந்த ஒரு அணிக்காகவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற டொமஸ்டிக் தொடர்களில் பங்கேற்காமல் இருந்த சூழலில், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியிலும் இடம்பெறாமல் இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்காக ஏறக்குறைய 220 ஒருநாள் போட்டிகளிலும், 78 T20 போட்டிகளிலும், 20க்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா விளையாடியுள்ளார். 3 விதமான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சுரேஷ் ரெய்னா பிடித்துள்ளார். இந்தியாவிற்காக T 20 முதல்முறையாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் பெற்றுள்ளார். மட்டுமல்லாமல் ஐபிஎஸ் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரராக தற்போது வரை திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். இருப்பினும், வெளிநாடுகளில் நடைபெறும் ஒருசில தொடர்களில் ரெய்னா பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : Suresh Raina , Cricket Match, Retirement, Suresh Raina
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...