பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பாக “திறனறித் தேர்வு” அறிவிப்பு

சென்னை: பள்ளி மாணவ /மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் “திறனறித் தேர்வு” அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக நடைபெறவுள்ளது. 2022-2023ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் / மாணவிகள் இத்தேர்வினை எழுத செப்டம்பர் 9 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.  பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும்.

இத்தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும்.  ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு அக்டோபர் 1ம் தேதி அன்று முற்பகல் 10.00 - 12.00 வரை நடைபெறும்.  இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ / மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.1500/- இரண்டு ஆண்டுகளுக்கு  தொகை வழங்கப்படவிருக்கிறது.

Related Stories: