காணிப்பாக்கத்தில் 5ம் நாள் பிரமோற்சவம் கிளி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று கிளி வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு,  கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 1ம்தேதி 21 நாட்கள் கொண்ட வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கியது. ஒவ்வொரு வம்சத்தினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்திற்கு பூஜை செய்து வாகனத்தை ஊர்வலமாக தொடங்கி வைப்பது வருகின்றனர். பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை மூலவருக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கிளி வாகனத்தை ஆரிய வைசியர் வம்சத்தினர் பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து, பக்தர்களுக்கு 4 மாதவீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். பிரமோற்சவத்தின் 6ம் நாளான இன்று விநாயகர் கஜ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Related Stories: