திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல்; குற்றப்புலனாய்வு துறைக்கு சிறப்பு ரோந்து வாகனம்

புழல்: திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு ரோந்து இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள சோதனை சாவடியில் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கண்காணிப்பாளர் கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பு சுற்று காவல் படை இரு சக்கர வாகனத்தை கொடியசைத்து வழங்கி துவக்கி வைத்தார். சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் ஜாபர் உட்பட போலீசார் சிறப்பு காவல் படை வாகனத்தில் ரோந்து சென்றனர். இதில், சென்னை சரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன், காவல் ஆய்வாளர் சுந்தரம்மாள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: