×

ஆவடி மாநகராட்சியில் புதுமைப்பெண் கல்வித்திட்டம்; அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: புதுமைப்பெண் கல்வித்திட்டத்தில் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கலந்து கொண்டார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமை பெண் திட்டத்தின்படி கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்தார். இந்நிலையில், இதன் முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 18 கல்லூரியை சேர்ந்த 754 மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆவடி அடுத்த இந்து கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது, `பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அப்படிப்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் நிலையில் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.1000 கல்லூரி மாணவிகளுக்கு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.

இதனை கல்லூரி மாணவிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்’ என கேட்டு கொண்டார். இதனைத்தொடர்ந்து ஆவடி வசந்தம் நகர் பகுதியில் நடைபெற்ற ரூ.21.90 கோடி மதிப்பீட்டில் பருதிப்பட்டு ஏரி உபரிநீர் கால்வாய் 550 மீ முதல் 2786 மீ வரை அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் நாசர் சிறப்பு பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகர மேயர் உதயகுமார், துணைமேயர் சூரியகுமார், ஆணையர் தர்ப்பகராஜ், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஆவடி மாநகர செயலாளர் ஆசிம் ராஜா, மண்டலக்குழு தலைவர் ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், பகுதிச்செயலாளர்கள் நாராயண பிரசாத், ராஜேந்திரன், பொன்.விஜயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags : Avadi Corporation ,Minister ,Nasser , Innovative Women Education Program in Avadi Corporation; Minister Nasser inaugurated
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...