திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; இன்று நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டி.எம்.சுகுமாரன், தா.மோதிலால் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (6ம் தேதி) காலை 9 மணியளவில் திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள என்.எஸ்.கே.டவரில் உள்ள திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகிக்கிறார். எம்எல்ஏக்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

இந்த கூட்டத்தில் இல்லங்கள் தோறும் புதிதாக இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்த்தல், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி நடத்துதல், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: