×

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: கும்மிடிப்பூண்டி பஜாரில் விழிப்புணர்வு நாடகம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து விழிப்புணர்வு நாடகம் நடந்தது. கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம், எல்லாபுரம் ஒன்றியம், கும்மிடிப்பூண்டி பேருராட்சி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 2 லட்சத்து 85 ஆயிரத்து 538 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 158 வாக்காளர்களும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 339 வாக்குகளும், 41 இதர வாக்குகளும் தற்பொழுது உள்ளது. தமிழக அரசு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டுமென அரசு சார்பாக விழிப்புணர்வு நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 330 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் ஆங்காங்கே ஊராட்சிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் முகாம்கள் நடைபெற்றது இந்த முகாமில் சுமார் 8 ஆயிரத்து 219 பேர் ஆதார் அட்டை இணைப்பதற்கு படிவம் கொடுத்தனர்.

அதோடு நேற்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் ஏற்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை உடன் ஆதார் அட்டை இணைக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த புத்தக்கலை குழுவினர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் காரணங்களும் இதனால் என்ன பயன்களும் எடுத்துரைக்கும் வகையில் நாடகமும் நடனம் ஆடியபடி இசை நிகழ்ச்சியோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு பேருந்து நிலையத்தில் ஒரு மணிநேரம் நடைபெற்றது. பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த மாதரம்பாக்கம், ஆரம்பாக்கம், புதுவாயில், தெருவாயில், கண்ணன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். இதில் தேர்தல் துணை வட்டாட்சியர் தேன்மொழி, மண்டல துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்களும், வெங்கடேசன், விஏஓஜெயச்சந்திரன், சிவக்குமார், தேவா உள்பட பலர் உடன் இருந்தனர். இந்தகலை நிகழ்ச்சி காரணமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் உடன் இதுவரை 91 ஆயிரத்து 850 பேர் இணைத்துள்ளனர். இதன்காரணமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணனை மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.


Tags : Gumpipundi , Linking of Aadhaar with Voter Card: An awareness play at Kummidipoondi Bazaar
× RELATED ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 20 கிலோ கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது