×

கடம்பத்தூர் ஒன்றியத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்; வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 129 மாணவிகளுக்கும், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 103 மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.டி.இ.ஆதிசேஷன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் டி.லட்சுமி, செல்லப்பாண்டி ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய திமுக செயலாளர் எம்.ரமேஷ், ஒன்றிய குழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், ஊராட்சி தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ், களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குலாபி, பிரபு, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஆர்.சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 232 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, `திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி வரும் தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதன்படி விலையில்லா மிதி வண்டி வழங்கும் திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். விலையில்லா மிதிவண்டியை பெறும் மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பள்ளிக்கு வந்து நன்றாகப் படித்து உயர் பதவியில் அமர வேண்டும். தங்களுக்கு ஏற்படும் சிறு, சிறு தோல்விகளை கண்டு கொள்ளாமல் தூக்கியெறிந்து தன்னம்பிக்கையோடு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

படிப்பு ஒன்று தான் மாணவர்களாகிய தங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும். பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களை நாம் கவுரவிக்க வேண்டும். பெற்றோர்கள் சொல்வதை கேட்டு செயல்பட்டால் வெற்றி உங்களை தேடி வரும்’ இவ்வாறு அவர் பேசினார். இதில் இளைஞர் காங்கிரஸ் காங்கிரஸ் நிர்வாகி சு.திவாகர், திமுக நிர்வாகிகள் ஆர்.கோபால், காமராஜ், மாணிக்கம், ஏகாம்பரம், தேவா, கண்ணதாசன், ஜெகன், அன்பு, தமிழ்மொழி, சண்முகம், சதாசிவம், சக்திதாசன், பிரபா, ஜெலால், துரை, பிலால், ஜானகிராமன், வெங்கடேசன், மோகன், பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kadambathur Union ,GG Rajendran , Free bicycles for male and female students in Kadampathur Union; Presented by VG Rajendran MLA
× RELATED கடம்பத்தூர் ஒன்றியத்தில் வாக்கு...