×

மதத்தின் பெயரில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: அரசியல் கட்சிகள் தங்களது பெயர்களில் மதம் மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வருகின்றன. இதற்கு எதிராக  சையத் வாசிம் ரிஸ்வி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘பல கட்சிகள் மதத்தின் பெயரையும், அடையாளத்தையும் பயன்படுத்துகின்றன. இதனால் கலவரங்கள் ஏற்படுகிறது. இறையாண்மை பாதிப்படைய கூடிய வகையிலான பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அது மிக தவறானது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. மதத்தின் பெயரை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு அக்டோபர் 18ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Election Commission , Supreme Court notice to Election Commission of political parties in the name of religion
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...