ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 2 அதிகாரிகள் பலி

காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் தூதரகம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. விசா பெறுவதற்காக பொதுமக்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விண்ணப்பதாரர்களின் பெயர்களை அறிவிப்பதற்காக தூதரக அதிகாரிகள் வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஆனால் இது குறித்த விவரங்களை ரஷ்ய தூதரகம் வௌியிடவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related Stories: