கனடாவில் பதற்றம் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் பலி

ரெஜினா: கனடாவின் சஸ்காச்வான் மாகாணத்தில் வடக்கிழக்கு சஸ்காடூனில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் நேஷன் மற்றும் வெல்டன் கிராமத்தில் பல்வேறு இடங்களில் மர்மநபர்கள் பொதுமக்களை கத்தியால் குத்திய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். இதன் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘சிலர் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்’’ என்றனர். மர்மநபர்கள் இரண்டு பேர் வாகனத்தில் சென்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்த இரண்டு பேர் தான் கத்திக்குத்து தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: