வ.உ.சி பிறந்தநாள் விழாவில் மோடி குறித்த கேள்விக்கு வைகோ காட்டம்

கோவை: கோவையில் நடந்த வ.உ.சி பிறந்தநாள் விழாவில் ‘‘உயர்ந்த தலைவரை பற்றி பேசும்போது, யாரையோ பற்றி பேசுகிறீர்கள்’’ என மோடி குறித்த கேள்விக்கு வைகோ காட்டமான பதில் அளித்தார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 151வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி இழுத்த செக்கிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்த வந்தார். அப்போது அவர் அளித்த ேபட்டி:  அவிநாசி சாலைக்கு வ.உ.சி பெயர் வைப்பது  குறித்த நீண்ட நாள் கோரிக்கை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சரிடம் சொன்னால்,  செய்வார் என்றார்.

கோவையில் வ.உ.சி.க்கு சிலை வைக்க அடிக்கல்  நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது வைகோவிடம், பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலங்களில் வைப்பது குறித்த கேள்வி எழுப்பிய போது, ‘‘உயர்ந்த தலைவரை பற்றி பேசும்போது, யாரையோ பற்றி பேசுகிறீர்கள்’’ என்று வைகோ காட்டமாக பதில் அளித்தார். இதையடுத்து செக்கிற்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ மரியாதை செலுத்த சென்றபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிரே வந்தார். அப்போது வைகோவும், வேலுமணியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர்.

Related Stories: