தஞ்சை வேதபுரீஸ்வரர் கோயிலில் திருடுபோன சோழர் கால நடராஜர் சிலை 62 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிப்பு

சென்னை: தஞ்சை திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சோழர் கால நடராஜர் சிலை, அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருவேதிக்குடி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வேதபுரீஸ்வரர் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து கடந்த 62 ஆண்டுகளுக்கு முன் நடராஜர் சிலை திருடுபோனது. இது, சோழர் காலத்தை சேர்ந்த பழமையான வேதபுரி நடராஜர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருவேதிக்குடி கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த சிலை தற்போது, நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. பிறகு இரு புகைப்படங்களில் உள்ள சிலைகளும் ஒன்று தான் என்று நிபுணர்களும் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள நடராஜர் சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புகாரின் படி 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலையை கண்டுபிடித்த போலீசாரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி பாராட்டினார்.

Related Stories: