ரிஷப்பன்டை திட்டியது ஏன்? கேப்டன் ரோகித் விளக்கம்

துபாய்: தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: அழுத்தம் நிறைந்த போட்டிகளில் ஒவ்வொரு பந்தும் மிக முக்கியம். ரிஸ்வான், நவாஸ் சிறப்பான பார்ட்னர் ஷிப் அமைத்தனர். இந்த கூட்டணி நீடித்தபோதும் நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஆனால், அந்த கூட்டணி சற்று நீண்ட நேரம் நீடித்துவிட்டது. எல்லா அணிகளுக்கும் கிளாஸ் இருக்கும். பாகிஸ்தான் அதனை சிறப்பாக வெளிப்படுத்தினர். இதில் நாங்கள் ஆச்சரியப்படவில்லை. அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினர். இரண்டாவது இன்னிங்ஸின்போது பிட்ச் பேட்டர்களுக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு தரும் எனக் கருதினோம்.  அப்படித்தான் இருந்தது.

181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன். எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன் அடித்தால் அது நல்ல ஸ்கோர் என்ற மனநிலையில் இருந்து மாறவேண்டும். சிறப்பாக விளையாடினால், நிச்சயம் வெற்றியைப் பெற்றிருக்க முடியும். பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். கோஹ்லி இன்று அபாரமாக விளையாடினார்.

   

அவரது ரன் தான் முக்கியமானதாக இருந்தது. ரிஷப் பன்ட் அந்த நேரத்தில், அப்படி ஷாட் அடித்து ஆட்டமிழந்திருக்க கூடாது. இது பெரிய தவறு. இதைத்தான், ஓய்வு அறையில் அவரிடம் கூறினேன். ஹர்திக் பாண்டியாவும் தவறான ஷாட் ஆடிதான் ஆட்டமிழந்தார். இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது, என்றார்.

Related Stories: