திருத்தணியில் 8 மின் மாற்றிகள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ இயக்கி வைத்தார்

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை துணை மின் நிலையத்தில் கே.ஜி.கண்டிகை, ஆதித்யா நகர் பகுதிகளில் 25 கி.வோ. திறன் கொண்ட மின்மாற்றியும் தெற்கு தெரு பஜனை கோயில் பகுதியில் 63 கி.வோ திறன் கொண்ட மின்மாற்றியும்   திருத்தணி துணை மின் நிலையத்தில் முஸ்லிம் நகர், சீனிவாசபுரம், ஏரிக கால்வாய் பகுதியில் முதன்மை திட்டத்தின் கீழ் 100 கி.வோ. திறன் கொண்ட மின்மாற்றியும் பொன்பாடி மேட்டு காலனி ரேஷன் கடை அருகே தட்கோ திட்டம் மூலம் 25 கி.வோ. மின் மாற்றியும் பூனிமாங்காடு துணை மின் நிலையம் பி.வெங்கடாபுரம் பகுதியில் தலா 63 கி.வோ. திறன் கொண்ட இரண்டு மின்மாற்றிகள், கொல்லகுப்பம் பெருமாள் கோயில் தெருவில் 63 கி.வோ. திறன் கொண்ட மின் மாற்றி என்று 8 மின்மாற்றிகள் 37.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா திருத்தணி மின்வாரிய கோட்டா செயற்பொறியாளர் பாரிராஜ் தலைமையில் நடைபெற்றது. உதவி செயற் பொறியாளர்கள் ரவி, முருகபூபதி, ராஜேந்திரன், கோட்டீஸ்வரி முன்னிலை வகித்தனர். கே.ஜி.கண்டிகை உதவி பொறியாளர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு 8 மின்மாற்றிகளை இயக்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.இந்த நிகழ்ச்சியில், திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், திருத்தணி ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதி சீரஞ்சீவி, உதவி பொறியாளர்கள் சுப்பிரமணி, அன்பு, விஜயா, கே.எஸ்.பாண்டியன், லியாஸ், ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நற்குணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: