கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் சாலையில் உலா வரும் காட்டு யானைகள்

நீலகிரி: கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் சாலையில் காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் முற்றிலும் பச்சை பசையெனக் காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இடம்பெயரும்  யானைகள் மீண்டும் நீலகிரி மாவட்டம் வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன.

இந்நிலையில் கோத்தகிரி மேட்டுப்பாளையத்தில் உள்ள மலைப்பாதை அதிக அளவு வனப்பகுதியைக் கொண்டுள்ளதால் இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள நான்காவது  கொண்டை ஊசி வளைவில் குட்டியுடன் கூடிய காட்டுயாணைகள் கூட்டம் சாலையோரம் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு இந்த பாதையை பயன்படுத்துவதால் இது போன்ற வனவிலங்குகள் சாலையில் உலா வருவதால் கைப்பேசி மற்றும் கேமராக்கள் வைத்து புகைப்படம் எடுத்து அவற்றை தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் சாலையோரங்களில் வரும் வனவிலங்குகள் அருகே செல்வது, புகைப்படங்கள் எடுப்பது குறித்து சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களிடையே வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும்  நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: